மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 103.63 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 4,099 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 69.62 டி.எம்.சி.யாக இருந்தது.