பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 18 -இல் தொடக்கம்

பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 18 -இல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 18 -இல் தொடக்கம்

பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 18 -இல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நேரடியாக நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வு ஜூலை 20 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
பி.இ. சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16,17 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
ஜூலை 18 -இல் தொழில் பிரிவு: அதனைத் தொடர்ந்து பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 18 -ஆம் தேதி தொடங்கி 20 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மாணவர்களுக்கும் தனித்தனியே குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்கள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com