10 நாள்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சட்டப்பேரவை

பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை வரும் திங்கள்கிழமை (ஜூன் 25) மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
10 நாள்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சட்டப்பேரவை

பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை வரும் திங்கள்கிழமை (ஜூன் 25) மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை உள்பட பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.
 தமிழக சட்டப் பேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி, உள்ளாட்சித் துறை, தொழில் துறை, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி என சில பிரதான துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 கடந்த 14-ஆம் தேதியன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று பேரவை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களின் மீது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றுகின்றனர். இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
 காவல் துறை மானியம்: மானியக் கோரிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் காவல் துறை மானியக் கோரிக்கை வரும் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த விவாதங்களுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். வருவாய், சுற்றுச்சூழல், வணிகவரிகள் துறை, தொழிலாளர் நலத் துறை போன்ற துறைகளின் மானியக் கோரிக்கைள் மீதான விவாதங்கள் அடுத்தடுத்த நாள்கள் வரவுள்ளன.
 முக்கிய பிரச்னைகள்: சட்டப் பேரவை கூட்டத் தொடர் பத்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் கூடவுள்ள நிலையில், பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், நாமக்கல்லில் திமுகவினர் கைது, எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவது, ஸ்டெர்லைட் விவகாரம் போன்ற பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com