குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி தீ விபத்தில் சிக்கி, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் புதன்கிழமை இறந்தார். இதையடுத்து இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர்

தேனி மாவட்டம் குரங்கணி தீ விபத்தில் சிக்கி, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் புதன்கிழமை இறந்தார். இதையடுத்து இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற சுற்றுலா சென்றபோது காட்டுத்தீயில் சிக்கியவர்களில் ஒருவரான, பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 90 சதவீத காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இரவு அவர் இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இவரது கணவரான விபின் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவல்ஸ் உரிமையாளர் கைது: ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பிரபு(30). டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான இவர் கடந்த 10 -ஆம் தேதி ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்து 12 பேரை குரங்கணி வனப் பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் செல்வதற்காக வேனில் அழைத்து வந்திருந்தார். குரங்கணியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய விபரம் குறித்து இவர் கடந்த மார்ச் 11 -ஆம் தேதி குரங்கணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 
இவரிடம், மார்ச் 12 -ஆம் தேதி க.விலக்கு காவல் நிலையத்தில் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார், பிரபுவிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வனச்சட்டத்தை மீறியதாகவும், உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகவும் அவரை போலீஸார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com