ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமரா செயல்பாடு நிறுத்தம்: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமரா செயல்பாடு நிறுத்தம்: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின்(சிசிடிவி) செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்று

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின்(சிசிடிவி) செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்று அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
 இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியது: ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் (நங்ழ்ண்ர்ன்ள் இர்ய்க்ண்ற்ண்ர்ய்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எங்கள் மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும் அவருக்குச் சிறப்பான சிகிச்சை அளித்தனர். அதன் காரணமாகவே அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின்புதான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
 அப்பல்லோ மருத்துவமனையைப் பொருத்தவரை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பார்க்க அனுமதிப்போம். அவரது அறையில் பணியில் இருந்த மருத்துவர்களிடம் அனுமதி பெற்று உறவினர்கள் அவரைப் பார்த்திருக்கலாம்.
 அணைக்கப்பட்ட கேமராக்கள்: ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர் அனுமதிக்கப்பட்ட பகுதியில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். எல்லோரும் அவர் சிகிச்சை பெறுவதைப் பார்க்கக் கூடும் என்பதால் கேமராக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
 வெளிப்படையான சிகிச்சை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களையும் ஒருநபர் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்துவிட்டோம். ஆணையத்திலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் ஆஜராக தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com