வரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சூரியன் மார்ச் 21-ஆம் தேதி பூமத்திய ரேகைக்கு மேல் உச்சியில் செங்குத்தாக பிரகாசிக்கிறது. அந்த நாள் சமபகல், சம இரவு என்று அழைக்கப்படுகிறது. அதன்பிறகு, சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்குகிறது. மார்ச் 3-ஆவது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை அனல்காற்றுடன் வெயில் சுட்டெரிக்கும். தமிழகத்தை பொருத்தவரை, கோடையில், வேலூர், சேலம், மதுரை, பாளையங்கோட்டை, பரமத்திவேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
 இந்நிலையில், நிகழாண்டுக்கான கோடை வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் தற்போது தொடங்கிவிட்டது. இனிவரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறியது: இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய (மார்ச்-மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து நீண்டகால அறிக்கை வெளியிடுவது வழக்கம். கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலை குறித்த அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் இரண்டு வாரத்துக்கு முன்பு வெளியிட்டது.
 அதன்படி, தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது, முந்தைய ஆண்டுகள் இதே காலக்கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்பநிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
 தமிழகத்தில் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை சற்று அதிகமாக காணப்படும்.
 அதிகபட்ச வெப்பநிலை தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வெப்பநிலை இயல்பை விட உயரும்பட்சத்தில் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றார் பாலச்சந்திரன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com