லஞ்சம் தர முடியாதா! அடித்து உதைத்த நெடுஞ்சாலைத் துறையினர்?

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லஞ்சம் தர முடியாதா என மிரட்டி, நெடுஞ்சாலைத் துறையினர் அடித்து உதைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் தர முடியாதா! அடித்து உதைத்த நெடுஞ்சாலைத் துறையினர்?

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லஞ்சம் தர முடியாதா என மிரட்டி, நெடுஞ்சாலைத் துறையினர் அடித்து உதைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: 
முத்தூர் குட்டப்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் எம்.பாலசுப்பிரமணி (30) என்பவர் கொடுத்துள்ள புகாரில், நானும், நத்தக்காடையூர் புதுவெள்ளியம்பாளையம் எம்.தங்கவேல் (60) இருவரும் முத்தூர் கொடுமுடி சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளரிடம் தோட்டத்து வேலை செய்து வருகிறோம். 

பள்ளிக்கு முன்புறம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலையை அரசு அனுமதியின்றி பராமரிப்பு செய்து வந்தோம். அப்போது நெடுஞ்சாலைத் துறை வெள்ளக்கோவில் உள்கோட்ட ஆய்வாளர்கள் ச.கணேசன், சு.விஜயா ஆகியோர் சாலைப் பணியாளர்களுடன் அங்கு வந்தனர். 

நெடுஞ்சாலைத் துறை சார்ந்த மேற்படி வேலையைச் செய்ய ரூபாய் 50 ஆயிரம் பணம் கேட்டனர். பள்ளி மேலாளர் தமிழ்மணி தரமுடியாதெனக் கூறியதால், அவருடைய சட்டையைப் பிடித்து இழுத்தனர். இதனைத் தட்டிக் கேட்ட எங்கள் இருவரையும் சாலை ஆய்வாளர்கள், இரண்டு சாலைப் பணியாளர்கள் என  நான்கு பேர் சேர்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனடிப்படையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருந்த பாலசுப்பிரமணி கொடுத்த வாக்குமூல புகாரின் பேரில், சாலை ஆய்வாளர்கள் ச.கணேசன், சு.விஜயா மற்றும் இரண்டு சாலைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com