தூத்துக்குடியில் 3ஆவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடியில் 3ஆவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டபவர்கள் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை மேலும் பராமல் இருக்க தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் தூத்துக்குடியில் கடைகளும் 3 ஆவது நாளாக மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com