புயல் பாதிப்பை அரசியலாக்கக் கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்கக் கூடாது எனவும், அனைத்துக் கட்சிகளும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புயல் பாதிப்பை அரசியலாக்கக் கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்கக் கூடாது எனவும், அனைத்துக் கட்சிகளும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட திங்கள்கிழமை வருகை தந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். புயல் பாதிப்பு சம்பவத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் செய்வது எதிர்ப்பு அல்ல. எதிர்பார்ப்பு. மத்திய அரசின் நிவாரணம் தமிழகத்துக்கு தேவைக்கேற்ப வழங்கப்படும்.
தொடர்ந்து நிவாரணம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். தமிழக அரசின் செயல்பாடுகளை கணக்கிடுவதற்கான நேரம் இது கிடையாது. பரிதவிக்கும் மக்களை பரிவோடு அணுக வேண்டும் என்றார். புயல் நிவாரணம் குறித்த நடிகர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு நடப்பது அரசியல், நடிப்பது அவர்களின் தொழில் என பதில் அளித்தார்.
தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  புயல் மற்ற மாவட்டங்களை விடவும் அதிகமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரத்தாண்டம் ஆடியுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுகிறது. மின் வாரிய ஊழியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். 
பாதிப்புகளை பார்வையிட்டார்:  விராலிமலையில் வீடுகள் மற்றும் உறவினரை இழந்து தவிக்கும் குடும்பங்களைப் பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், விராலிமலை தெற்கு தெருவில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சுதிர்குமார் மனைவி பரமேஸ்வரி (25)  வீட்டிற்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு,  விரைவில் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com