தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178 பணியிடங்களுக்கு எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் மேலும் இரண்டு இணையதளங்களை வனத் துறை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர்கள், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் நவம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் www.forests.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான கடந்த 6-ஆம் தேதி முதல் ஏராளமானோர் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டதால் அது முடங்கியது.
இந்நிலையில் விண்ணப்பிப்போரின் வசதிக்காக tnfusrc.in/drfsoct18, tnfusrc.in/drfgoct18 என்ற மேலும் இரண்டு இணையதளங்களை ஏற்படுத்தி உள்ளதாக செய்திக் குறிப்பில் வனத் துறை தெரிவித்துள்ளது.