மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பயன்பாட்டு பொருளாக மேம்படுத்தப்பட வேண்டும்

பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் வெறும் திட்ட அறிக்கை அளவில் நின்று விடாமல், பயன்பாட்டுப் பொருளாக சந்தையில் கிடைக்கும் வகையில்
ஹேக்கத்தான் போட்டியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு வழங்குகிறார் நாஸ்காம் தலைவர் எம்.எஸ்.பாலா.
ஹேக்கத்தான் போட்டியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு வழங்குகிறார் நாஸ்காம் தலைவர் எம்.எஸ்.பாலா.


பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் வெறும் திட்ட அறிக்கை அளவில் நின்று விடாமல், பயன்பாட்டுப் பொருளாக சந்தையில் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று நாஸ்காம் தலைவர் எம்.எஸ்.பாலா கேட்டுக் கொண்டார்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கதான் போட்டி பரிசளிப்பு விழாவில் அவர் பேசியது:
சர்வதேச அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சி தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. முன்பு தொழில் நிறுவனங்கள் பொறியியல் கல்வி பயின்ற மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்து அவர்களுக்கு தங்களுக்கு ஏற்றவகையில் உரிய பயிற்சி வழங்கும் நிலை இருந்து வந்தது. இப்போது உரிய பயிற்சி பெற்று தகுதி உடையவராக இருந்தால் மட்டுமே பணியில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் இன்றைய பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்துக்கும் மேலாக, தொழில்நுட்ப வளர்ச்சி நிலை குறித்தும் அறிந்து இருக்கும் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
கருத்தரங்குகள் மூலம் மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புக்கான திட்டம் குறித்த அறிக்கை அளிக்கும் நிலையை மேம்படுத்தி, ஹேக்கதான் போன்ற நுண்ணறிவாற்றலுடன் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போட்டிகளை நடத்துவதன் மூலம் மாணவர்களின் திறனை தொழில்துறையின் தேவைக்கேற்ப மேம்படுத்த முடியும் என்றார் எஸ்.பாலா.
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.மாணவர் ராஜீவ் ரவீந்தரன் நாயர் குழுவின் வாகன ஓட்டுநர் பாதுகாப்புக் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. சுகோ கார்ப்பரேஷன் நிர்வாகி ராஜேந்திரன் தண்டபாணி, கல்லூரி தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து, முதல்வர் சி.வி.ஜெயக்குமார், துறைத் தலைவர் டி.ஷீலா, ஒருங்கிணைப்பாளர் எம்.ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com