முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 86ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பல்வேறு காலங்களில் வலுவான - வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க அவர் மேற்கொண்ட பணிகள் அவருடைய தெளிவான பார்வையையும், நிர்வாகத்திறமையையும் எடுத்துக்காட்டுவதோடு, இந்திய வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.