அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக கொடி!

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலத்தில் நெடுஞ்சாலையோரம் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன.
புதன்கிழமை காலை, அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 
தகவல் அறிந்து போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனர். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கொடிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விட்டதாக கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சாலையோரம் கொடிக் கம்பம் அமைந்துள்ளதால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இதனை தவறாகப் புரிந்து கொண்டு அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. ஆகவே, அதிமுக கொடியை முழுக் கம்பத்தில் ஏற்றி பறக்க விடுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதனை ஏற்று, அங்கிருந்தவர்கள் அதிமுக கொடியை மீண்டும் முழுக் கம்பத்தில் ஏற்றி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com