கல்வி கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலர் கைது

கல்வி கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலர் கைது

மகன் கல்வி கட்டணத்திற்காக கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் மற்றும்


நாமக்கல்: மகன் கல்வி கட்டணத்திற்காக கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நடத்துனரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்துள்ளனர். 

ஈரோடு பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் நனிகவுண்டன்(46). சேலம் சொர்ணபுரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் தனது மகன் கல்வி செலவுக்காக ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதற்காக கூட்டுறவு சங்க செயலரான வாழப்பாடியைச் சோ்ந்த மனோகரன்(54) என்பவரை பல முறை அணுகியுள்ளார். 

இந்நிலையில் அண்மையில் கடன் வழங்க ஒப்புக் கொண்ட சங்க செயலர் மானோகரன், கடன் வழங்க வேண்டுமெனில் திருச்செங்கோட்டைச் சோ்ந்த அண்ணா தொழிற்சங்க செயலரான நாமகிரிப்பேட்டையச் சோ்ந்த வேலுச்சாமி(55) என்பவரை அணுக வேண்டும். அவா் கேட்கும் தொகையை வழங்கினால் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வேலுச்சாமியை பேருந்து ஓட்டுநர் நனிகவுண்டன் அணுகியுள்ளார். அப்போது ரூ.5 ஆயிரம் தந்தால் உடனடியாக கடன் வழங்கப்படும் என கூறியுள்ளார். இதற்கு ஓட்டுநர் நனிகவுண்டன் ஒப்புக் கொண்டபோதிலும் லஞ்சம் தர அவருக்கு மனமில்லை. 

இதுகுறித்து அவா் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி நேற்று வெள்ளிக்கிழமை மாலை திருச்செங்கோடு பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த வேலுச்சாமியிடம், நனிகவுண்டன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி டி.ஜெயகுமார் தலைமையிலான போலீஸார் வேலுச்சாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், வேலுச்சாமி அளித்த தகவலின்படி சிக்கன கூட்டுறவு நாணய சங்க செயலரான மனோகரனையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான வேலுச்சாமி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com