தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக பிரச்னைகள் குறித்து பேசப்படவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது கட் அவுட், பேனர்கள் வைக்க பல இடங்களில் சென்னை மாநகராட்சி மின்சாரம் திருடப்பட்டுள்ளது.

அப்போது மின்திருட்டு தொடர்பான வீடியோவையும் அவர் காட்டினார். சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படலாம், சம்மன் அனுப்பப்பட்டால் குற்றவாளியா? சம்மன் அனுப்பியதை வைத்து மட்டுமே ஒருவரை குற்றவாளி எனக்கூற முடியாது? தண்டனை அறிவிக்கப்பட்டால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூற முடியும். 

தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரை என்றைக்கும் இரட்டை இலைதான். அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com