என் மீது புகார்கள் வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான்: பொன். மாணிக்கவேல் அதிரடிப் பேட்டி

சிலைக் கடத்தல் வழக்கில் தனி மனிதராகப் போராடி வருகிறேன் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் கூறியுள்ளார்.
என் மீது புகார்கள் வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான்: பொன். மாணிக்கவேல் அதிரடிப் பேட்டி

சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் தனி மனிதராகப் போராடி வருகிறேன் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் கூறியுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் பொன். மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்யுமாறு வற்புறுத்துவதாக டிஜிபி அலுவலகத்தில் நேற்றும், இன்றும் அவரின் கீழ் பணியாற்றும் காவலர்கள் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த பொன். மாணிக்கவேல், என் மீது புகார்கள் வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான் சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் காவலர்களே எனக்கு எதிராக திரும்பியதாக நான் கருதவில்லை. இதனை நான் முன்கூட்டியே எதிர்பார்த்தேன். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தனி ஆளாகப் போராடி வருகிறேன் என்று கூறினார்.

மேலும், என் மீது புகார் கூறிய 21 காவலர்களும் 400 நாட்களில் ஒரு வழக்குக் கூட பதிவு செய்யவில்லை. ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை. குற்றவாளிகளைப் பற்றிக் கூட அவர்களுக்குத் தெரியாது. டிவியில் கூட பார்க்கவில்லை. அவர்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.

250 நாட்களுக்கு மேலாக பணிக்கு வராதவர்களை எப்படி வேலைக்கு சேர்த்துக் கொள்ள முடியும். 5 டிஎஸ்பி, 5 ஏடிஎஸ்பிகள் தான் எனக்கு வழங்கப்பட்டுள்ளனர்.  ஆனால் இவர்கள் மூலம் கூட இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை. அத்தனை சிலைகளும் மாவட்ட எஸ்.பி.க்கள் மூலம் பிடிபட்டன. புகார் அளித்த 21 காவல் அதிகாரிகளும் ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, புகார் அளித்திருக்கும் காவலர்கள் இதுவரை பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதற்கு மெயிலோ மனுவோ அளித்திருக்கிறார்களா? அவதூறாக பேசுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது எல்லாம் பழங்கதை. மன உளைச்சல் என்பதே ஒரு மாயை. எனக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் பின்னடைவு ஏற்பட்டதால், சிலர் இந்த பாணியை பின்பற்றுகிறார்கள். 

அறநிலையத் துறை அதிகாரி கவிதாவை கைது செய்த மறுநாளே, சிலைக் கடத்தல் வழக்கு சிபிக்கு மாறுகிறது. ஆதாரம் இல்லாமல் எஃப்ஐஆர் போட சொன்னதாக நான் மிரட்டியதாகக் கூறியவர்களுக்கு சட்ட அறிவே இல்லை. அந்த புகாரை வாங்கியவர்களுக்கும் கூட.

மன உளைச்சல் என்று சொல்பவர்கள் காவலர்களே இல்லை. என்னை நம்பலாம். நல்ல எண்ணங்கள், ஆன்மிகம் இவைதான் என்னை செலுத்துகின்றன என்று உத்வேகத்துடன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com