கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்படவில்லை: திமுக 

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்படவில்லை என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விளக்கமளித்துள்ளார். 
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்படவில்லை: திமுக 

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்படவில்லை என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா கடந்த 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்திலும், அதைத்தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்எம்சி
மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அகில இந்திய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனவர். மேற்கண்ட நிகழ்ச்சியில் இலட்சக் கணக்கில் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

கூட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் பெறப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும். சிறை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால், பொது மக்களின் ஆதரவு கழகத்திற்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால், இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை காண்பித்து குற்றம் சுமத்துகிறார். 

வாட்ஸ் அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்து பேசினால், அமைச்சர் மீது எவ்வளவோ பேசலாம். ஆனால் திமுகவினர் என்றைக்கும் தரம் தாழ்ந்து ஈடுபட மாட்டார்கள். அமைச்சரின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தலைவர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியால், ஆளும் கட்சி ஆட்டம் கண்டு, அஞ்சி நடுங்கிப்போய் இருப்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முன்னதாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக பிரச்னைகள் குறித்து
பேசப்படவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது கட் அவுட், பேனர்கள் வைக்க பல இடங்களில் சென்னை மாநகராட்சி மின்சாரம் திருடப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார். அப்போது மின்திருட்டு தொடர்பான வீடியோவையும் அவர் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com