பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

திருச்சியில், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

திருச்சியில், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் கொடாப்பு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (50). கடந்த வாரம் திங்கள்கிழமை இரவுப் பணியில் இருந்த இவர் நள்ளிரவு 1 மணியளவில் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் (பாரா) இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து உளவுத் துறை போலீஸார் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் கிற்கு தகவல் சென்றது. விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பாலசுப்ரமணியன் மீது திருச்சி மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் காவலர்  அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து, உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஒரு வார காலத்துக்கும் மேல் ஆன நிலையில், அவர் மீது தற்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com