தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள்:  அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

வரும் கல்வியாண்டில் தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: 
அடுத்த ஆண்டு முதல் கரூர் மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும். அதில் 150 இடங்களை ஒதுக்கீடு செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளோம். ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து கூடுதலாக 345 இடங்களை ஒதுக்குமாறும் கோரியுள்ளோம். 
அதனடிப்படையில் கணக்கிடும்போது அடுத்த கல்வியாண்டில் 495 இடங்கள் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இதுதொடர்பான விவரங்கள் அடுத்த சில மாதங்களில் தெளிவாகத் தெரியவரும் என்றார் அவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com