அதிமுகவில் தனிப்பட்ட உரிமை யாருக்கும் கிடையாது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக எனும் இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. இதில் தனிப்பட்ட உரிமை யாருக்கும் கிடையாது என்று அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான
அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.


அதிமுக எனும் இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. இதில் தனிப்பட்ட உரிமை யாருக்கும் கிடையாது என்று அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் 3ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
அரசியல் வியாபாரி: பல்வேறு கட்சிகளுக்குச் சென்று வந்தவர் செந்தில் பாலாஜி. பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்துத்தான் நிறம் மாறும். ஆனால் ஐந்து கட்சிகளுக்குப் போய் விட்டு, இப்போது எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்று விட்டார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. இங்கு (அதிமுகவுக்கு) வந்து வியாபாரத்தைத் துவக்கினார். பின்னர் முடித்துக் கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குச் சென்று தன்னுடைய வியாபாரத்தைத் தொடங்கினார். அங்கு சரியாக வியாபாரம் நடக்கவில்லை. அதனால் திமுகவுக்கு போய்விட்டார். கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒருவர் செந்தில்பாலாஜி.
வேறு கட்சியில் இருந்து வந்தாலும், அவர் அதிமுக ஆட்சியில் அமைச்சராக்கப்பட்டார். அந்த நன்றி எல்லாம் மறந்துவிட்டு இன்று அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியோருக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டார். ஆனால் இறைவன் அங்கேயும் அவரை விட்டு வைக்கவில்லை. இதுதான் இறைவன் செயல். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்.
கட்சியைக் காப்போம்: 44 ஆண்டுகள் அதிமுகவில் இருந்த காரணத்தால் உங்களால் (அதிமுகவினரால்) முகவரி கிடைத்துள்ளது. எனவே உழைப்பும், விசுவாசமும் எங்கு இருந்தாலும் நிச்சயமாக அதற்கென்று ஒரு தனி மரியாதை இருக்கும். இந்தக் கட்சியை உடைப்பதற்கும், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் எவ்வளவு சதி திட்டத்தை பலரும் தீட்டினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆரால் உருவாக்கி, ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட அதிமுகவை நாம் கட்டிக் காத்திடுவோம். எப்போதுமே தொண்டர்களால் ஆளப்படுகின்ற இயக்கம் அதிமுக. உழைப்பால் வந்த இயக்கம். இங்கு தனிப்பட்ட உரிமை யாருக்கும் கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com