தமிழகத்துக்கு நிதி: பிரதமருடன் முதல்வர் இன்று ஆலோசனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஆவன செய்வது உள்பட பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்குவது குறித்து பிரதமர் நரேந்திர  மோடியுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர் ஜெயக்குமார்.
புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர் ஜெயக்குமார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஆவன செய்வது உள்பட பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்குவது குறித்து பிரதமர் நரேந்திர  மோடியுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (அக்.8) ஆலோசனை நடத்த உள்ளார்.
காலை 10.30 மணிக்கு...பிரதமர் மோடியை திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
ஒரு மாத காலமாக...தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியைச் சந்திக்க கடந்த ஒரு மாத காலமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரம் ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதற்கு முன்புகூட பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்கப்பட்டது. 
இதையடுத்து பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திக்க திங்கள்கிழமை (அக்.8) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி சென்றார். அவருடன், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விவகாரங்களைக் கவனித்து வரும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் தில்லி  சென்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்... முன்னதாக தில்லி விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுக எம்பிக்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில்  அதிமுக  நாடாளுமன்ற  உறுப்பினர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனை  மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார்,  தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம்,  எம்.பி.க்கள் 
டாக்டர் வேணுகோபால்,  நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை... மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ரூ.1,264 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகக் கூறப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பெற்ற விவரங்கள் மூலம் நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்திய,  மாநில அரசுகளைக் குறைகூறத் தொடங்கினர். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு நிதி ஒதுக்குவது உள்பட அனைத்துக் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக ஆவன செய்யுமாறு பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வருவாயில் ரூ.6,000 கோடி... தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கீட்டில் அதிக நிதி ஒதுக்கவும்,  ஜி.எஸ்.டி.  வரி வருவாயில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 6 ஆயிரம் கோடி நிலுவையை விரைந்து அளிக்கவும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கவே முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார்.
மேலும், தமிழக உள்ளாட்சிகளுக்கான கடந்த ஆண்டு நிலுவை, இந்த ஆண்டுக்கான முதல் தவணை, மீனவர்களுக்கான புதிய  திட்டம்,  இயற்கைப் பேரிடர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை,  ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான உதவித்  தொகை என தமிழகத்துக்கு  வழங்கப்பட வேண்டிய நிதி குறித்தும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று திரும்புகிறார்: பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்து தமிழக திட்டங்கள் தொடர்பாக வேண்டுகோள் விடுத்து விட்டு திங்கள்கிழமை இரவே சென்னை திரும்ப உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com