சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை திட்டம்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை சேலம் பசுமைவழிச் சாலை திட்ட வழக்கின் ஆவணங்களை அருங்காட்சியகத்தில்தான் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


சென்னை சேலம் பசுமைவழிச் சாலை திட்ட வழக்கின் ஆவணங்களை அருங்காட்சியகத்தில்தான் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை- சேலம் இடையேயான 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சக்திவேல் மற்றும் சுந்தரம் ஆகியோரை உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் போலீஸார் கைது செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அவர்களைக் கைது செய்ய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த பதிலைத்தான் தொடர்ந்து கூறி வருகிறீர்கள். இந்த வழக்கில் தகவல்களை அரசுத் தரப்பிடமிருந்து வலுக்கட்டாயமாகத்தான் பெற வேண்டியுள்ளது. அரசு வழக்குரைஞர்களின் பணி சிறப்பாக இல்லை. மேலும், இந்த வழக்கின் ஆவணங்களை அருங்காட்சியகத்தில்தான் வைக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களை தமிழக அரசு பாதுகாக்க நினைக்கிறது. இது தொடர்பான வழக்கில் ஏற்கெனவே வெளியே வந்தவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்யாமல் பாப்பிரெட்டி நீதிமன்றமும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது ஏன் எனத் தெரியவில்லை. 
இனிமேலும் காலம் தாழ்த்தினால் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com