மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு மே 7 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் பக்தர்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்த ஆண்டும் ஐயப்பன், குருவாயூரப்பன் பொறிக்கப்பட்ட 2, 4, 8 கிராம் தங்க லாக்கெட்டுக்கள் விற்பனைக்கு உள்ளன. பூஜையில் வைக்கப்பட்ட டாலர்களை வாங்க முன்பதிவுக்கும், மேலும் தகவல்களுக்கும் 044-28171197, 28172197 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளுமாறு கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.