குரூப் 4 தேர்வுக்கு அரசு சார்பில் இன்று பயிற்சி: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு

குரூப் 4 தேர்வு எழுதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் பயன்பெறும் வகையில், ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமை பணியாளர் மற்றும் நிர்வாகச்


குரூப் 4 தேர்வு எழுதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் பயன்பெறும் வகையில், ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடக்கி வைக்கிறார்.
குரூப் 4 தேர்வு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எழுத 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒருநாள் பயிற்சி முகாமுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் புதன்கிழமை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஆயிரம் பேரைத் தாண்டியது: இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்கான அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குரூப் 4 தேர்வர்களும் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால், முகாமில் பங்கேற்போரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேரிலும் வரலாம்: இணையதளத்தில் மட்டுமின்றி, பயிற்சி முகாம் நடைபெறும் கலைவாணர் அரங்கத்துக்கு காலை 9 மணிக்கே வந்து பெயர்களைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்கிழமை காலை 9 மணி முதல் நேரடி பதிவும் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு கையேடு, குறிப்பு நோட்டு, மதிய உணவு, தேநீர் உள்ளிட்ட அனைத்தும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்போருக்கு முந்தைய தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com