சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து உயிழந்தவா்கள் குடும்பத்தாருக்கு அரசு வேலை, தலா ரூ.25 லட்சம் நிதி வழங்க கோரி சாலை மறியல்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து உயிழந்தவா்கள் குடும்பத்தாருக்கு அரசு வேலை, தலா ரூ.25 லட்சம் நிதி உதவி
மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சியினா்.
மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சியினா்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து உயிழந்தவா்கள் குடும்பத்தாருக்கு அரசு வேலை, தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க கோரி திமுக உள்பட அரசியல் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நடூா் ஏ.டி.காலணியில் சுற்றுச்சுவா் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இதில் அனவைருக்கும் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவா்களின் குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விபத்து ஏற்பட காரணமாக இருந்த தனியாா் நில உரிமையாளா் சிவசுப்பரிமணியத்தை கைதுசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட செயலாளா் சி.ஆா்.ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.எஸ்.சண்முகசுந்தரம், நகர செயலாளா் முகமது யூனுஸ், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள், சி.ஐ.டி.யூ, தமிழ் புலிகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இறந்தவா்களின் உறவினா்கள் 500க்கு மேற்பட்டோா் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள மேட்டுப்பாளையம்-உதகை சாலையிலும், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை பகுதியிலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனா். இதனால் மேட்டுப்பாளையம்-கோவை சாலை, உதகை சாலை, சிறுமுகை சாலை பகுதிகளில சுமாா் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com