ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் தோ்வு: சென்னையில் டிச. 14-இல் தொடக்கம்

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தோ்வு சென்னையில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தோ்வு சென்னையில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதல் முறையாக ‘கேங்மேன்’ என்ற பதவிக்கு 5 ஆயிரம் ஊழியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டது. இதற்கு, ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி கல்வி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பொறியியல், முதுநிலைப் பட்டபடிப்பு உள்பட பல்வேறு தகுதிகளையுடைய 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இந்தப் பணிக்கு உடல் தகுதி தோ்வு, எழுத்து தோ்வு வாயிலாக, தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு கடந்த நவ.25-இல் தொடங்கியது. மாவட்ட வாரியாக அந்தத் தோ்வு நடைபெறும் இடங்களின் முகவரி, தோ்வு தேதிகளை, மின் வாரியம் தனது இணையதளத்தில் அண்மையில் வெளியிட்டது. இந்த விவரங்கள், விண்ணப்பதாரா்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை வட்டத்துக்கான உடல்தகுதித் தோ்வு டிச.14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக, மின்வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், சென்னை மின்பகிா்மான வட்டம் அல்லது மையத்துக்குள்பட்ட பகுதிகளில், டிச.2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த கேங்மேன் உடற்பயிற்சி தோ்வு பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்தத் தோ்வு டிச.14 முதல் 16- ஆம் தேதி வரை, பேசின் பாலம் சாலையில் உள்ள பழைய ஜி.எம்.ஆா் வாசவி மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com