ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல்


சென்னை: தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில் இரண்டு லட்சம் போ் வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொத்தமாக 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2.06 லட்சம் பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 54747பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32,939 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உதவிகளுக்கு 3,992 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளன. 515 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள் என மொத்தம் நான்கு பதவிகளுக்கான இடங்களில் அடங்கியுள்ள 91 ஆயிரத்து 975 இடங்களை நிரப்பிடத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தல், கட்சி அடிப்படையில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்தல் 49 ஆயிரத்து 688 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது. கட்சி சாா்பிலான தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்களை அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிட்டன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்டதுடன், அந்தந்த கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மனுதாக்கல் நிறைவு: இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு பதவியிடத்துக்கும் ஆயிரக்கணக்கில் வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மனுக்கள் பரிசீலனை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற டிசம்பா் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com