திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சிலையில் விரிசல்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுரத் தூணில் உள்ள பெண் மங்கை சிலையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக பக்தர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுரத் தூணில் உள்ள பெண் மங்கை சிலையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக பக்தர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் கோபுரமாக கருதப்படும் அம்மணி அம்மன் கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள தூண்களில் பெண் மங்கைகளின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பெண் மங்கை சிலையின் மார்பகத்துக்கு மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பக்தர்கள் புதன்கிழமை கண்டறிந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் தலைமையிலான அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பெண் மங்கை சிலையில் மார்பகங்களின் மேல் பகுதியில் லேசான விரிசல் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறியதாவது: இந்த விரிசல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால், கோயில் கோபுரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com