அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று, பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார். 

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் கால்நடைத்துறையில் 820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்துள்ளார். 

மேலும் நெய்வேலி தொகுதியில் தேவைக்கேற்ப கால்நடை கிளை நிலையங்கள் அமைத்துத் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com