எதிரிகளை வீழ்த்தவே மாற்றுக்கொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
அதிமுக கூட்டணி வலுவானதாகத்தான் இருக்கும். கூட்டணி என்பது கட்சியின் கொள்கைகளுக்காக, அந்த கட்சியின் செயல்பாடுகளுக்காக அல்ல. கூட்டணி என்பது எதிரியை வீழ்த்தவும், தமிழகத்தில் நல்லாட்சி அமையவும் ஏற்படுத்துவது. பாமகவுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது, அதை நாங்கள் ஏற்க மாட்டோம். அதுபோல எங்கள் கொள்கையை அவர்களும் ஏற்க மாட்டார்கள்.
பாமகவும், அதிமுகவும் ஒன்றையொன்று ஏற்கெனவே விமர்சித்த கட்சிகள்தான். இருந்தாலும் கூட்டணி வேறு, கட்சிகளின் கொள்கை வேறு. பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் சேர்வதும் முதல்வரின் நல்ல முடிவாகத்தான் இருக்கும். திமுகவும் காங்கிரஸும் கொள்கை இல்லாத கூட்டணி என்றார் அவர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.