"விரைவில் குறைந்த கட்டண குளிர்சாதன பேருந்துகள்'

ஏழைகளும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.க

ஏழைகளும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் செய்தியாளர்களிடம் அவர்கூறியது:
போக்குவரத்துத் துறையில் 2000 எலக்ட்ரிக்கல் பேருந்துகளை புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  முதற்கட்டமாக 500  பேருந்துகள் சென்னை, மதுரை மற்றும் கோவையில் பயன்பாட்டுக்கு வரும்.   சுற்றுச்சூழல் மாசு இல்லாத 12,000 பேருந்துகளையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்குள் 14,000 பேருந்துகளை  கொண்டு வர ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்த செலவில், குறைந்த தூரத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  முதற்கட்டமாக சென்னையில் 50 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக விரைவில் வந்துவிடும். நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். அதிமுக-பாஜக கூட்டணி தான் மெகா கூட்டணி என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com