10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது: கவிஞர் வைரமுத்து

10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 
10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது: கவிஞர் வைரமுத்து

10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அண்மையில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை சனிக்கிழமை அளித்தார். இதையடுத்து இந்த சட்டம், நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது. தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைய மதுவே காரணம். 

தமிழக அரசின் வருமானத்துக்காக 20% மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? மதுவிலக்கு அவசியம் தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com