நல்லூர் கிராமத்தில் முயல் விடும் விழா

காணும் பொங்கலையொட்டி, வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் முயல் விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த நல்லூரில் நடைபெற்ற முயல் விடும் விழா.
வந்தவாசியை அடுத்த நல்லூரில் நடைபெற்ற முயல் விடும் விழா.


காணும் பொங்கலையொட்டி, வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் முயல் விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று குள்ளநரி விடும் விழா நடைபெறுவது வழக்கம். குள்ளநரி எந்தத் திசையில் ஓடி மறைகிறதோ, அந்தப் பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது இந்தக் கிராம மக்களின் நம்பிக்கை.
குள்ளநரி கிடைப்பது அரிதானதால், கடந்த சில ஆண்டுகளாக குள்ளநரிக்கு பதிலாக முயல் விடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டின் காணும் பொங்கலான வியாழக்கிழமை முயல் விடும் விழா அந்தக் கிராமத்தின் மின்அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இதையொட்டி, அந்த மைதானத்தில் தீர்த்தவாழி அம்மன் கோயில் உத்ஸவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, முயல் அங்கிருந்து சிறிது தொலைவு எடுத்துச் செல்லப்பட்டு கீழே விடப்பட்டது. அங்கிருந்து மேற்கு திசையில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் முயல் ஓடி மறைந்தது. பின்னர், அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com