குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசமாயின.
குடியாத்தம் தரணம்பேட்டையைச் சோ்ந்த நசீா்அஹமத்(38), மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள நத்தம் கிராமம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கு வைத்துள்ளார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
இச்சம்பவம் குறித்து நகர போலீஸாரா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.