சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணக்கப்படுகிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணதங்கம் ஒரு கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.3,020-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 பைசா உயர்ந்து, ரூ.39.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.39,200 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,020
1 பவுன் தங்கம் 24,160
1 கிராம் வெள்ளி 39.20
1 கிலோ வெள்ளி 39,200
திங்கள்கிழமை விலை
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,016
1 பவுன் தங்கம் 24,128
1 கிராம் வெள்ளி 39.10
1 கிலோ வெள்ளி 39,100