தலைமைச் செயலக ஊழியர்களுக்கான ஆடைகள்: தமிழக அரசு புதிய உத்தரவு

தலைமைச் செயலக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரும் போது எந்தவகை ஆடைகளை அணிய வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 


தலைமைச் செயலக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரும் போது எந்தவகை ஆடைகளை அணிய வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 
 இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உரிய திருத்தங்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:
தலைமைச் செயலக ஊழியர்கள், அலுவலகங்களுக்கு வரும் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் நல்ல, சுத்தமான உடைகளை அணிய வேண்டியது அவசியமாகும். அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் இதனை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
பெண்-ஆண் ஊழியர்கள்: தலைமைச் செயலகத்துக்கு வரும் பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகியவற்றை அணிய வேண்டும். சேலையைத் தவிர பிற உடைகளை அணியும் போது துப்பட்டா அணிவது அவசியம். அதனுடைய நிறம் மென்மையான வண்ணத்தில் இருக்க வேண்டும். இதேபோன்று, ஆண் ஊழியர்கள் பேண்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும். டி-சர்ட் போன்ற உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.    
நீதிமன்றங்கள்-தீர்ப்பாயங்கள்: நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது ஆண் ஊழியர்களாக இருந்தால் முழுக்கை கொண்ட கோட் -களை  டை-யுடன் அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஆடையின் வண்ணம் மென்மையான வண்ணமாக இருக்க வேண்டும். அடிக்கும் நிறத்தில் இருந்திடக் கூடாது. பெண் ஊழியர்களாக இருந்தால் சேலை அல்லது சல்வார் கம்மீஸ் அல்லது சுடிதார் அணிய வேண்டும். அதனுடன் மென்மையான வண்ணத்தில் துப்பட்டா அணிய வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com