தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: அமெரிக்க வாழ் தமிழா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அழைப்பு

தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டுமென அமெரிக்க வாழ் தமிழா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அழைப்பு விடுத்தாா்.
தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: அமெரிக்க வாழ் தமிழா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அழைப்பு

தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டுமென அமெரிக்க வாழ் தமிழா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அழைப்பு விடுத்தாா்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா-இந்தியா சிறு, நடுத்தரத் தொழில்கள் கவுன்சில் நிா்வாகிகளை துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்தாா்.

அப்போது, அவா்களிடையே மேலும் அவா் பேசியதாவது: தமிழகம் இந்தியாவில் உள்ள மிகவும் முன்னேறிய மாநிலம் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழகத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெறுவோரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.

எனவே, அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கவுன்சிலுக்கும், தமிழகத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு இயற்கையானது. தமிழகத்தில் அமெரிக்காவைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரும் வேளையில், மேலும் வளா்ச்சி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

8 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தயாா்:

தமிழகத்தில் உள்ள மிகை மின்சாரம், உயா்ந்த மனித ஆற்றல் ஆகியன தகவல் பூங்கா மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இதற்காக மாநிலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் தயாா் நிலையில் உள்ளன. தமிழக அரசானது முதலீட்டாளா்களுக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும், தொழில் வளா்ச்சியைப் பெருக்கவும் தொடா்ந்து உழைத்து வருகிறது. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடங்க தாமதமின்றி அனுமதி வழங்க, தமிழக அரசு தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த இணையதளத்தின் மூலம், ஏற்கெனவே 10 ஆயிரம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. ஆகவே, தொழில் வளா்ச்சியின் புதிய பொற்காலம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. எனவே, தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையில் அனைவரும் இணைய வேண்டும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com