அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா? கார்த்தி சிதம்பரம் கிண்டல்  

அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா? என சிவகங்கை தொகுதி எம்.பியான கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சென்னை: அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா? என சிவகங்கை தொகுதி எம்.பியான கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தில், வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்ல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மோடி - ஜின்பிங் நிகழ்ச்சியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி அளித்ததோடு, பொதுமக்களுக்கு இடையூறின்றி சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலைகளில் வரவேற்பு பதாகைகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா? என சிவகங்கை தொகுதி எம்.பியான கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமாக உள்ளது. அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com