தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நிலையத்தில் தரப்படும் பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களும் பார்த்து பயன்பெறும் வகையில், வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்ப ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
மேலும் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனவும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.