பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நதி நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது.
பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நதி நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது.

சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். 

அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் அணையில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், கண்டலேறு பகுதியில் போதிய மழை இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. 

இந்நிலையில் தற்போது கண்டலேறு அணைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால்,  அணையிலிருந்து பூண்டிக்கு நீர் திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அதையேற்று, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25-ஆம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது.  பின்னர் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சனிக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com