சி-விஜில் செயலி மூலம் தேர்தல் விதி மீறல் குறித்து புகாரளிக்கலாம்: தேர்தல் ஆணையர்

 சி-விஜில் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் தேர்தல் விதி மீறல் குறித்து புகாரளிக்கலாம் என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறியுள்ளார்.
சி-விஜில் செயலி மூலம் தேர்தல் விதி மீறல் குறித்து புகாரளிக்கலாம்: தேர்தல் ஆணையர்


சென்னை:  சி-விஜில் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் தேர்தல் விதி மீறல் குறித்து புகாரளிக்கலாம் என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறியுள்ளார்.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

தேர்தல் ஆணையர்கள் சுஷில் சுந்திரா மற்றும் அசோக் லவாசா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிகாரிகள் அலட்சியப் போக்குடனோ, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையிலோ செயல்பட்டால் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என்று கூறினர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்னை வந்தனர். இந்தக் குழுவினர், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தி முடித்தனர்.

அரசியல் கட்சியினர்-அதிகாரிகள்: தேர்தல் ஆணையர்கள், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். 

அதன்பின், இன்று மதியம் தேர்தல் ஆணையர்கள்  செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டியளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப் பணம், தங்க நகை என ரூ.1,460.02 கோடி மதிப்புள்ள பொருட்கள் இந்தியா முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் இதுவரை ரூ.127 கோடி ரொக்கப் பணமாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com