தேர்தல் பிரசாரத்தில் விதிமீறல்:  பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக, மத்திய இணை அமைச்சரும்  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான
தேர்தல் பிரசாரத்தில் விதிமீறல்:  பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு


கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக, மத்திய இணை அமைச்சரும்  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தக்கலை பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த மார்ச் 30- ஆம் தேதி திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை பாஜக, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தேர்தல் ஆணைய நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் தாஜ் நிஷா, தக்கலை காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். 
அதில், கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகேயுள்ள மேட்டுக்கடை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், எவ்வித அனுமதியும் பெறாமல் திறந்த வாகனத்தில் கட்சிக் கொடிகளைக் கட்டியபடி, இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com