
சென்னை: தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரனை தேர்தல் வரை அதுதொடர்பான பணிகளில் இருந்து விலக்கி தேர்தல் ஆணையம் இரு நாட்களுக்கு முன்பாக உத்தரவு பிறப்பித்தது. அவருக்குப் பதிலாக டிஜிபி அசுதோஷ் சுக்லாவை அந்த பதவியில் தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் மகேஷ் குமார் அகர்வால், தினகரன் மற்றும் தேர்தல் பணிக்கான போலீசார் பங்கேற்றனர்.
இந்த் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்கேற்ற தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுறுத்தியுளார்.