சென்னை-கோவைக்கு சுவிதா சிறப்பு ரயில்

 புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் (சென்னை சென்ட்ரல்) -கோயம்புத்தூர் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


 புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் (சென்னை சென்ட்ரல்) -கோயம்புத்தூர் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரலில் (சென்னை சென்ட்ரல்) இருந்து ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு வாராந்திர சுவிதா சிறப்பு ரயில் (82613) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். 
கோயம்புத்தூரில் இருந்து ஏப்ரல் 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு சிறப்பு கட்டண வாராந்திர ரயில் (06014) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் (சென்னை சென்ட்ரல்) ரயில் நிலையத்தை வந்தடையும். இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (ஏப்.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com