மேம்பாடு, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரையும் சேர்த்து மேம்பாடு: மோடியின் தேர்தல் பஞ்ச்

பாஜக மூன்று முக்கிய கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அது மேம்பாடு, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரையும் சேர்த்து மேம்பாடு என்பதே என்று ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மேம்பாடு, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரையும் சேர்த்து மேம்பாடு: மோடியின் தேர்தல் பஞ்ச்


பாஜக மூன்று முக்கிய கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அது மேம்பாடு, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரையும் சேர்த்து மேம்பாடு என்பதே என்று ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அதிமுக - பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, நம்பிக்கையின் அடிப்படையில் தென்னிந்தியாவின் ராமேஸ்வரமும், வட இந்தியாவின் காசியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் இப்போது இருந்திருந்தால் இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திய மிஷன் சக்தி திட்டத்தை நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார். அதோடு கலாமின் கனவை நனவாக்கிக் காட்டுவோம். 

முன்னெப்போதையும் விட தற்போது வறுமை மிக வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஏழ்மையே இல்லாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  ஏழைகள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திடட்த்தின் கீழ் நாட்டில் உள்ள 50 கோடி ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில், அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்துள்ளது. மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல சக்திக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

100 ஆண்டு கால பாம்பன் பாலமானது தற்போது முன்னுதாரணமான பாலமாக மாற்றப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி மோடி ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றதும் நதிகளை இணைப்பதற்கான தனி ஆணையம், மீன்வளத்துறைக்கும் தனி அமைச்சகம்  அமைக்கப்படும் என்று மோடி கூறினார்.

மோடி ஹிந்தியில் பேசுவதை எச். ராஜா தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்குக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com