மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்த மாட்டோம்

மக்கள் விரும்பாத திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்தியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்தா
மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்த மாட்டோம்

மக்கள் விரும்பாத திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்தியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
 காரைக்குடியில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 4 இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்குபெற்று காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளை விளக்கி மிகத்தெளிவாகப் பேசியுள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வு ரத்து, தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
 அதே நேரத்தில் பாஜக அமைச்சர் பியூஸ் கோயல், நீட் தேர்வு தொடர்ந்து இருக்கும் என்றும் தமிழகத்திற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ விலக்கு அளிக்க முடியாது என்றும் அதிமுக அரசை தமிழ்நாட்டில் சம்மதிக்க வைப்போம் என்றும் அவர் பேசியிருக்கிறார்.
 இதில் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடுகள் மக்களுக்கு தெளிவாக தெரிகிறது. இதில் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் அரசு ஜனநாயக அரசாக அமையும். பாஜக அரசு வழக்கம்போலவே சர்வாதிகார அரசாக அமையும்.
 இரண்டு ஆண்டுகளில் நாட்டில் உற்பத்தி சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2018-2019-க்கான வரவு-செலவு அறிக்கையில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி வரி வருவாய் குறைந்திருக்கிறது. உற்பத்தி குறைவு, வரி வருவாய் வசூல் போன்றவைகளில் இந்த அரசின் நிர்வாகத்தின் காரணமாக இந்தத் தொகை துண்டு விழுந்திருக்கிறது.
 இதைப் பார்க்கும்போது தனக்கு பின்னால் பேரழிவு என்ற நிலையை இந்த அரசு பின்பற்றுவதாகவே நான் கருதுகிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடுத்தர மக்கள், சராசரி வருமானவரி செலுத்துபவர்கள் ஆகிய இரண்டு பிரிவினருக்கு கூடுதல் வரிச்சுமை இருக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெளிவாக தெரிவித்துள்ளார்.
 சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தொழில் வளர்ச்சியே இல்லை என்று ஒரு குற்றச்சாட்டை அனைத்து அரசியல் கட் சிகளும் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது.
 அந்த காலகட்டத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்கிற பட்டியல் என்னிடம் உள்ளது. தற்போதைய சிவகங்கை அதிமுக எம்.பி. 2014 - 2019 ஆகிய ஐந்தாண்டுகளில் என்னென்ன செய்தார் என்கிற பட்டியலைத் தரமுடியுமா? என்றார்.
 நீட் தேர்வு நிலைப்பாட்டை பார்த்து வாக்களியுங்கள்
 சென்னை, ஏப்.13: நீட் தேர்வு குறித்த பாஜக மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைப் புரிந்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
 நீட் தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது. காங்கிரஸ் அரசு அமைந்தால் நீட் தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் நீட் தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி, சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18-ஆகும். மாநில மக்களின் விருப்பத்தையும், உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? என்று அவர் கூறியுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com