விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், பழையபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு கிணற்றிலிருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர் எரிவாயு சேமிப்புக் கிடங்குக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் வகையில், கடந்த சில மாதங்களாக எரிவாயு குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய் அமைக்கப்படுவதால், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 மேலும், இத்திட்டத்தால் சுமார் 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சனிக்கிழமை நாங்கூர் பகுதியில் விளைநிலங்களுக்கு மத்தியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டு, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து அவ்விடத்துக்கு வந்த சீர்காழி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வந்தனா, வட்டாட்சியர் சபீதாதேவி, திருவெண்காடு காவல் ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, எரிவாயு குழாய் அமைக்கும் பணியை நிறுத்துவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com