அனைத்து மதத்தினரையும் சமமாகவே பார்க்கிறது பாஜக: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

அனைத்து மதத்தினரையும் பாஜக சமமாகவே பார்க்கிறது. எந்த வேறுபாடும் பார்ப்பது இல்லை என்று மத்திய ஜவுளிதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
அனைத்து மதத்தினரையும் சமமாகவே பார்க்கிறது பாஜக: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

அனைத்து மதத்தினரையும் பாஜக சமமாகவே பார்க்கிறது. எந்த வேறுபாடும் பார்ப்பது இல்லை என்று மத்திய ஜவுளிதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
 குஜராத்தி சமாஜ் சார்பில், தமிழகத்தில் வாழும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து தொடங்கியுள்ள "தமிழ்நாடு பிரவஷி சங்' என்ற அமைப்பின் தொடக்க விழா சென்னை புரசைவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த சங்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர் மத்திய ஜவுளிதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
 ரேபரேலி தொகுதியில் நேரு குடும்பத்தினர் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். அந்தத் தொகுதியில் 50 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. போதுமான வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை. அதுபோல, அமேதி தொகுதியிலும் எந்த முன்னேற்ற நடவடிக்கை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. பாஜக ஆட்சியில் அமேதி தொகுதியில் 2 லட்சம் கழிவறைகளும், 1.5 லட்சம் வீடுகளும் 5 ஆண்டுகளில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோற்று விடுவோம் பயத்தில், கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடுகிறார்.
 புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி உடனடியாக தக்க பதிலடி கொடுத்து, பயங்கரவாதிகளை ஒழித்து நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தார். அனைத்து மதத்தினரையும் பாஜக சமமாகவே பார்க்கிறது. யாரையும் வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. மத்திய சென்னையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் சாம் பால் வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.
 இந்த நிகழ்ச்சியில், குஜராத்தி சமாஜ் சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
 மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com