சுடச்சுட

  

  பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை; ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியம்!

  By DIN  |   Published on : 16th April 2019 12:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vote

   

  வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை, அதே சமயம், பூத் ஸ்லிப் வைத்திருந்தால் அதை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

  ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது, வாக்களிக்க வேண்டும் என்றால் பூத் ஸ்லிப் கட்டாயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை. பூத் ஸ்லிப் என்பது வாக்காளரின் பெயர், வாக்குச்சாவடி பற்றிய விவரம் போன்றவையும் இருக்கும். இதன் மூலம் வாக்களிக்கும் பணி எளிமையாகுமே தவிர, அது முக்கியம் அல்ல.

  அதே சமயம், பூத் ஸ்லிப் இருக்கிறதே, அடையாள அட்டைகள் எதுவும் கொண்டுவரவில்லை என்று கூற முடியாது. தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் அடையாள அட்டைகளில் ஒன்றை கட்டாயம் கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

  மேலும், வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை மாலைக்குள் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai