சுடச்சுட

  

  இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்!

  By DIN  |   Published on : 17th April 2019 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  apr_17


  சென்னை: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கோடைக்காலம், கோடை மழை போன்ற வார்த்தைகளை பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். கோடை மழை என்பது மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்துக்குள் பெய்யும். இதே சமயத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக நாட்டின் மத்திய மற்றும் வடமேற்கு மாநிலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டும் மார்ச் 15ம் தேதி கோடை மழை பற்றிய செய்திகளை வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த மழையும் பெய்யவில்லை. ஆனால் தற்போது மெதுவாக தமிழகத்தில் மழை தொடங்கியுள்ளது. நேற்று கன்னியாகுமரியில் தெறிக்கவிடும் வகையில் மழை பெய்துள்ளது. 

  சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், தெற்கு கடற்கரைப் பகுதிகளாக வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்து வரும் 10 நாட்களில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மழை பெய்யும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மட்டுமே இந்த சமயத்தில் மழையை பார்க்காமல் போகப்போகின்றன.

  இந்த மழையால் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்கள்தான் பெரும் மழையைப் பெறப் போகின்றன. அதே சமயம் கடற்கரையை ஒட்டியிருக்கும் மாவட்டங்கள் எப்போதுமே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அல்லது புயல் சின்னம் உருவானால் மட்டுமே மழை வாய்ப்பு பெறும்.

  தேர்தலன்று மழை பெய்யுமா?

  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே கன்னியாகுமரி மக்கள் நாளை வாக்களிக்க செல்வதாக இருந்தால் காலையிலேயே சென்று வாக்களித்து விட்டு வருவதால் மழையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

  கன்னியாகுமரியைப் பொறுத்தவரை மழை மாலை 4 மணிக்கு மேல்தான் தொடங்கும். இதேப்போல கன்னியாகுமரி, திருநெல்வேலை  மறறும் தென் தமிழக மாவட்டங்களிலும் நாளை மாலை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  சென்னைவாசிகள் மனதை கனமாக்கிக் கொண்டு படிக்கலாம்..
  கடந்த சில நாட்களைப் போலவே அடுத்து வரும் நாட்களும் வெப்பம் நிறைந்த நாட்களாகவே அமையும். சென்னையைப் பொறுத்தவரை தட்பவெப்ப நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai